தாமதமின்றி ரேஷன் பொருள் வழங்க அறிவுரை
ஆத்துார்: அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்-கரன், ஆத்துார் நகராட்சி வ.உ.சி., நகரில் உள்ள ரேஷன் கடையில், நேற்று ஆய்வு செய்தார். அப்போது, 'பொருட்கள் இருப்பு விபரங்கள் குறித்து தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும். பகுதி நேர கடை திறக்கும் நேரம் குறித்து தகவல் அளித்து, தாமதமின்றி பொருட்கள் வழங்க அறிவுறுத்தினார். இதுகுறித்து ஜெயசங்கரன் கூறுகையில், ''ரேஷன் கடைகளை சரி-வர திறக்காமலும், அரிசி, கோதுமை குறைந்த அளவில் வழங்கு-வதாகவும் புகார் வந்ததால், அத்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தோம். புகார் குறித்து, கலெக்டரிடம் தெரிவித்து தீர்வு காணப்படும்,'' என்றார்.