உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 10 ஆண்டுக்கு பின் ரூ.50 லட்சம் கிடைத்தது துணை சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை

10 ஆண்டுக்கு பின் ரூ.50 லட்சம் கிடைத்தது துணை சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகுமலை, கோணமடுவு, முத்தானுார், சூரியூர் உள்ளிட்ட குக்கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். கோணமடுவில், 1972ல் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் சேதம் அடைந்ததால், 10 ஆண்டுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லை.கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி மையத்தில் இருந்தபடி கர்ப்பிணியருக்கு ஆலோசனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். 10 ஆண்டு கால மக்கள் கோரிக்கையால், துணை சுகாதார நிலையம் கட்ட, ஊராட்சி ஒன்றியத்தின், 15வது நிதிக்குழு மானியம், 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.நேற்று கோணமடுவில், துணை சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை நடந்தது. பனமரத்துப்பட்டி பி.டி.ஓ., கார்த்தி தலைமை வகித்து, பணியை தொடங்கி வைத்தார். பனமரத்துப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் மகிதா, தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலர் உமாசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !