புது பஸ் ஸ்டாண்டில் மீண்டும் ஆக்கிரமிப்பு
'புது பஸ் ஸ்டாண்டில்மீண்டும் ஆக்கிரமிப்பு'சேலம், நவ.20-மா.கம்யூ., கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று சேலம் மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு: சேலம் புது பஸ் ஸ்டாண்டில், கடந்த வாரம் கமிஷனர் நேரில் வந்து, இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்பை அகற்றினார். ஆனால், தற்போது சில கடைகள் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். ஆம்னி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள செப்டிக் டேங்க் மீது, உணவகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவறை, வாகன நிறுத்தம் ஆகிய இடங்களில் கட்டணக்கொள்ளை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.