உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏ.ஜி.என்., பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏ.ஜி.என்., பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

இடைப்பாடி, உலக போதை பொருள் தடுப்பு நாளை ஒட்டி, கொங்கணாபுரம் ஏ.ஜி.என்., பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைவர் ஆயிகவுண்டர் தலைமை வகித்தார். ஊர்வலத்தை, அமெரிக்காவை சேர்ந்த ஏ.ஜி.என்., பள்ளி புரவலர் பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரங்கம்பாளையம், சேலம் பிரதான சாலை, கொங்கணாபுரம் பஸ் ஸ்டாண்ட் வழியே சென்ற ஊர்வலம், மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிந்தது. கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, பள்ளி முதல்வர் உள்பட, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி