மேலும் செய்திகள்
நீர், உர மேலாண் வழிமுறை: விவசாயிகளுக்கு அறிவுரை
30-Nov-2024
வீரபாண்டி, டிச. 22-நிலக்கடலை செடியில் அடி தண்டு அழுகல் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை:நிலக்கடலை செடிகளில் தற்போது அடி தண்டு அழுகல் நோய் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இது பயிரின் எல்லா பருவத்திலும் பாதிக்கும். விதை முளைப்பதற்கு முன், பூஞ்சாண காரணிகள், மண்ணில் தங்கி விதைகளை தாக்கி முளைப்பதை தடுக்கிறது. நோய் பாதித்த இளம் செடிகள், வட்ட வடிவ பழுப்பு புள்ளிகளை இலைகளின் மேல் ஏற்படுத்தும். இது பரவி செடிகளை முற்றிலும் அழித்துவிடும். விதை மற்றும் மண் மூலம் இந்த நோய் பரவுகிறது. நோய் பாதித்த செடியின் மட்கிய பாகங்கள் மூலமாகவும், பூஞ்சாணம் பரவும். இதை தடுக்க நல்ல தரமான விதைகள் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். ஆழமாக விதைக்காமல் நிலத்தில் இருந்து குறைந்த ஆழத்தில் மட்டும் விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 2 கிராம் கார்பண்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைத்த, 20ம் நாளில் கார்பண்டசிம் மற்றும் மேன்கோசப் கலந்த கரைசல், 0.25 அளவில் மண்ணில் தெளிக்க வேண்டும். அடி உரமாக ஏக்கருக்கு, 2 கிலோ காப்பர் சல்பேட் இடுவதால் நோய் பரவலை தடுக்க முடியும். இந்த வழிமுறைகளை பின்பற்றி, விவசாயிகள் பயன்பெறலாம்.
30-Nov-2024