மேலும் செய்திகள்
திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம்
12-Mar-2025
பனமரத்துப்பட்டி: களர், உவர் நிலங்கள், பயிர் வளர்ச்சியை தடுத்து விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்துவதால், அந்த நிலங்களை சீர் செய்யும் வழிமுறை குறித்து, பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் அறிக்கை: களர் நிலமான களி மண் மீது சோடிய அயனிகள் அதிகமாக படிந்து விடுவதால் மண் இறுகி, காற்றோட்ட வசதியின்றி வேர் வளர்ச்சி பாதிக்கிறது. உவர் நிலமாக இருந்தால், நீரில் கரையும் உப்பு வெண்மை நிறமாகப்படிந்து இருக்கும். உவர் நிலத்தை சிறு பாத்திகளாகப் பிரித்து உவர் அற்ற நீர், மழைநீர் அல்லது வாய்க்கால் நீர் பாய்ச்சி, தேக்கி, வடிகால் மூலம் உப்புகளை வெளியேற்றிய பின், ராகி, பருத்தி, குதிரை மசால், தக்காளி, சாகுபடி செய்ய வேண்டும். இயற்கை உரம், காம்போஸ்ட் உரம் இட வேண்டும். இப்படி சீர்திருத்தம் செய்து நெல் மற்றும் இதர பயிர்களை விளைவித்து பயன் பெறலாம். 'ஜிப்சம்' எனும் கால்சியம் சல்பேட், களர் மண்ணுடன் நன்கு கலக்கி, சேற்று உழவு செய்து, நல்ல நீரை தேங்கும்படி செய்து பின் வடிகால் மூலம் வடியச்செய்தால் சோடியம் அயனிகளை அகற்றி விடலாம். பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மண்வளம் மற்றும் மண் நலம் திட்டத்தில், ஜிப்சம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பெற்று பயன்பெறலாம்.
12-Mar-2025