நகராட்சி கூட்டத்தை புறக்கணித்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள்
ஆத்துார்: ஆத்துார் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவி நிர்மலாபபிதா தலைமை வகித்தார். அதில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து அம்பேத்கர் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்-றும்படி, தி.மு.க., - காங்., வி.சி., கட்சி கவுன்சிலர்கள், தலைவி-யிடம் மனு அளித்தனர்.பின் நடந்த விவாதம் வருமாறு:தி.மு.க., கவுன்சிலர் தங்கவேல்: 5வது வார்டில் கழிப்பிடத்துக்கு மின்விளக்கு, தெருவில் மின் கம்பம் அமைப்பது தொடர்பாக பலமுறை கூறிவிட்டேன்.நிர்மலாபபிதா: மின்விளக்கு, புது கம்பம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.தி.மு.க., கவுன்சிலர் குமார்: வார்டில் உள்ள குறைகளை சரி-செய்ய கூறினாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.கமிஷனர் சையது முஸ்தபாகமால்: ஆய்வு செய்து உரிய பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., கவுன்சிலர் சங்கர்: 31வது வார்டில் உள்ள பல்வேறு தெருக்களில் மின்விளக்குகள் இல்லை. என் வார்டில், 400க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. கமிஷனர்: நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி-றது. தெருக்களில் உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் அமைக்-கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.ஆனால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 5 பேர் புறக்கணித்தனர்.இதுகுறித்து, அ.தி.மு.க., குழு தலைவர் உமாசங்கரி கூறுகையில், 'காலை, 10:30 மணிக்கு கூட்டம் என அறிவித்து, 11:30 மணி வரை யாரும் வரவில்லை. தீர்மானமும், மக்களுக்கான திட்-டங்கள் இல்லாமல் செலவுகள் மட்டும் இருந்ததால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்துள்ளோம்,'' என்றார்.