குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்க நடவடிக்கை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சேலம்: சேலத்தில், 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டத்தை, தனியா-ருக்கு தாரைவார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.சேலம் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கமிஷனர் ரஞ்ஜீத்சிங் முன்னிலை வகித்தார்.கவுன்சிலர்கள் பேசியதாவது:இளங்கோ(தி.மு.க.,): தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளில் சாம்பார், டீ என, சூடான உணவு பொருட்களை கட்டி விற்கின்-றனர். இதை உடனே தடுக்க வேண்டும்.அசோகன்(தி.மு.க.,): பனமரத்துப்பட்டி ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.தெய்வலிங்கம்(தி.மு.க.,): 9வது வார்டில் மூடப்பட்ட, நாய்கள் இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை மையத்தை, உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 13 மாதங்களில் முடிக்க வேண்டிய பாதாள சாக்கடை திட்டம், 15 ஆண்டுக்கும் மேலாக தொடர்கிறது. திட்டம் முடிக்கும் முன், அதற்கான டிபாசிட் தொகை வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.பன்னீர்செல்வம்(தி.மு.க.,): மாநகராட்சிக்கு தினமும், 135 எம்.எல்.டி., தண்ணீர் வருகிறது என்றாலும், 10 நாட்களுக்கு ஒரு-முறைதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. முறையாக வினி-யோகிக்க வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்டுள்ள இணைப்-புகளை துண்டிக்க வேண்டும்.செல்வராஜ் (அ.தி.மு.க.,): மாநகராட்சியில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை, தனியாருக்கு தாரைவார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்-டுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்தால், இன்று, 150 ரூபாயாக உள்ள குடிநீர் வரி, 1,615 ரூபாய் வரை உயரக்கூடும். இத்திட்-டத்தை கைவிட வேண்டும்.யாதவமூர்த்தி(அ.தி.மு.க.,): பணியாளர் இ.பி.எப்., தொகை செலுத்தாமல் இருப்பது, மறுக்கப்பட்ட காசசோலையால் மோசடி, பஸ் ஸ்டாண்ட் சுங்க வரி நஷ்டம் உள்ளிட்ட தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் ரசீது கூட இல்லாமல், 700 கோடி ரூபாய் வரை, அன்னை தெரசா அறக்கட்டளையினர் வசூ-லித்துள்ளனர்.அப்போது, தி.மு.க., கவுன்சிலர்கள் குறுக்கிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உடனே, குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து, வெளிநடப்பு செய்கிறோம் என கூறி, எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, கொறடா செல்வராஜ் உள்-பட, 7 கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.செயற்கை தட்டுப்பாடுஅ.தி.மு.க., கவுன்சிலர் செல்வராஜ் கூறுகையில், ''சேலத்துக்கு தினமும், 140 எம்.எல்.டி., தண்ணீர் கொண்டு வரப்பட்டும், பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் வினியோகம், 10 நாட்களுக்கு ஒருமுறை நடக்கிறது. குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, செயற்கை தட்டுப்பாட்டை, திட்டமிட்டே செய்து வருகின்றனர்,'' என்றார்.