உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேர்தலில் தவறான பிரமாண பத்திரம் தாக்கல் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்

தேர்தலில் தவறான பிரமாண பத்திரம் தாக்கல் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்

திருவண்ணாமலை, டிச. 18-தேர்தல் பிரமாண பத்திரத்தில், பொய் தகவல் அளித்துள்ளதாக தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வீரமணி, ஜோலார்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த, 2012 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதில், பிரமாண பத்திரத்தில் சொத்துக்களை மறைத்து, வேட்பு மனு தாக்கல் செய்ததாக, வேலுாரை சேர்ந்த ராமமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்காததால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராமமூர்த்தி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதால், கடந்த, ஜூலை, 25 ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதை மறைத்து, தேர்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக கூறி, தேர்தல் ஆணையம், 125ஏ(பி.என்.எஸ்) மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உள்பட, 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்தது. பின்னர், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை, நவ., 13ல் விசாரித்த மாஜிஸ்திரேட் மகாலட்சுமி, நவ., 26ல், வீரமணி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அன்று அவர் ஆஜராகாததால், டிச., 17ம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று, வீரமணி ஆஜரானார். வழக்கை வரும், ஜன., 6ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ