அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பிறந்தநாள் விழா
மேட்டூர்:அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சின், 71வது பிறந்த நாள் விழா, நேற்று மேட்டூர் நகர அ.தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது.நேற்று காலை மேட்டூர் அ.தி.மு.க., மாநிலங்களவை எம்.பி., சந்திரசேகரன் தலைமையில், நிர்வாகிகள் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து தங்கமாபுரி பட்டணம் தங்கமலை முருகன் கோவில், சேலம்கேம்ப ஆஞ்சநேயர் கோவில், பெரியார் நகர் மூலமாரியம்மன் கோவில்களில் வழிபாடு செய்தனர். பின்பு நகர அலுவலகத்தில், மேட்டூர் மசூதி இமாம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.மகளிரணி மாவட்ட செயலாளர் லலிதா, மருத்துவர் அணி மாவட்ட துணை தலைவர், சந்திரமோகன், நகர துணை செயலாளர் ஆறுமுகம், நகர இணை செயலாளர் மகேஸ்வரி, துணை செயலாளர் தீபா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் நிர்மல் ஆனந்த், நகர செயலாளர் ஹரிஸ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.