எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
சேலம், டிச. 25-முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 37வது நினைவு தினத்தையொட்டி, சேலம் அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு, மாநகர், மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர் வெங்கடாஜலம், பொறுப்பாளர் சிங்காரம் ஆகியோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னதாக, 4 ரோட்டில் இருந்து, அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக புறப்பட்டு வந்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், பொருளாளர் வெங்கடாசலம், பகுதி செயலர்கள் முருகன், சரவணன், பாலு, ஜெகதீஷ்குமார் உள்பட ஏராளமான அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.ஆத்துார், கோட்டையில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் கட்சியினர், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, நகர செயலர் மோகன், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.ஓமலுாரில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு, ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி தலைமையில் கட்சியினர், மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணன், வெற்றிவேல், மாநில ஜெ., பேரவை செயலர் விக்னேஷ், ஓமலுார் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், நகர செயலர் சரவணன் பங்கேற்றனர்.வீரபாண்டி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு, எம்.எல்.ஏ., ராஜமுத்து அஞ்சலி செலுத்தினார். பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிலவாரப்பட்டியில் வக்கீல் மணிகண்டன், பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில், நகர செயலர் சின்னதம்பி உள்ளிட்டோர் மாலை அணிவித்து வணங்கினர். தாரமங்கலத்தில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர். எம்.எல்.ஏ.,க்களான, சங்ககிரி சுந்தரராஜன், ஓமலுார் மணி, ஒன்றிய செயலர்கள் காங்கேயன், மணிமுத்து, நகர செயலர் பாலசுப்ரமணியம், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.அயோத்தியாப்பட்டணத்தில், தெற்கு ஒன்றிய செயலர் ராஜசேகரன் தலைமையில் கட்சியினர், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா, மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இடைப்பாடியில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு நகர செயலர் முருகன் மாலை அணிவித்தார். நகராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன், சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை மாவட்ட துணை செயலர் கந்தசாமி, நகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்ககிரி மேற்கு ஒன்றியம் சார்பில் காவேரிப்பட்டி ஊராட்சி, வட்ராம்பாளையத்தில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு, சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தரராஜன் மாலை அணிவித்தார். ஒன்றிய குழு துணைத்தலைவர் சிவக்குமாரன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.