உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூரில் இன்று அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் இன்று அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டூர்: -அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்-கோவன் அறிக்கை:மேட்டூர் நகராட்சியில் குடிநீர், குண்டும், குழியுமான சாலைகள், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அவதிப்படு-கின்றனர். வீடு, கடைகளுக்கு சொத்து வரி அதிகரிப்பால் சிரமப்ப-டுகின்றனர். தி.மு.க., அரசின் சீர்கேடுகளை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகே, ஜன., 9(இன்று) காலை, 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.முன்னாள் அமைச்சர் மோகன் தலைமை வகிக்கிறார். சேலம் புற-நகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ராஜ்யசபா எம்.பி., சந்திர-சேகரன் முன்னிலை வகிக்கின்றனர். எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் வெங்கடாசலம், ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலையரசன், மின்வாரிய அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் சம்பத், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, வக்கீல் அணி செயலர் சித்தன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஜெயகாந்தன், நிர்மல் ஆனந்த், பானுபிரதாப், மேச்-சேரி கிழக்கு, மேற்கு, கொளத்துார் கிழக்கு, மேற்கு ஒன்றிய செய-லர்கள் சந்திரசேகர், செல்வம், செல்வராஜ், சுப்ரமணியன், மேச்-சேரி, கொளத்துார், பி.என்.பட்டி, டவுன் பஞ்சாயத்து செயலர்கள் குமார், ராஜரத்தினம், மோகன்குமார், நகர நிர்வாகிகள் பங்கேற்-கின்றனர். மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ