உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ஆத்துார், அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை:எம்.ஜி.ஆர்., மலைவாழ் மக்களுக்கு வழங்கிய நில உரிமை பட்டாவை கணினியில் பதிவு செய்ய வேண்டும். ஆத்துார், ஏற்காடு தொகுதிகளில், மலைவாழ் பகுதியில் சேதமடைந்த தார்ச்சாலைகளை சரிசெய்தல்; கருமந்துறை, கரியகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தல்; கருமந்துறையில், அரசு வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லுாரி அமைத்தல்; பழங்குடியினருக்கு முழு மானியத்தில் வழங்கும் திட்டங்களுக்கு வசூல் செய்த ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத, தி.மு.க., அரசை கண்டித்து, ஜூன், 21ல்(நாளை), கருமந்துறையில், மாவட்ட செயலரான, என் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயசங்கரன், சித்ரா, நல்லதம்பி, ராஜா, மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, நகர செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ