மேலும் செய்திகள்
தான்தோன்றிமலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு
10-Aug-2025
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை, கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று தொடங்கி வைத்தார்.திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக சென்ற ஊர்வலம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை சென்றடைந்தது. இதில் பல்வேறு செவிலியர் கல்லுாரிகளை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: இளைஞர்கள், மக்கள் மத்தியில் எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த, 12ல் தொடங்கப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, வரும் அக்., 12 வரை வட்டார, கிராம, நகர அளவில் நடத்தப்பட உள்ளன. கடந்த, 12ல், மாநில அளவில் நடந்த ஆன்லைன் வினாடி-வினா போட்டியில், 2,390 பேர் கலந்து கொண்டனர். எச்.ஐ.வி., பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில், 20 நாட்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு, தனியார் கல்லுாரிகளில் எச்.ஐ.வி., குறித்த விழிப்புணர்வு பயிற்சி, ஓமலுார், சங்ககிரி, மேட்டூர், ஆத்துார் வட்டாரத்தில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு பிரசாரம், ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.இவ்வாறு கூறினார்.
10-Aug-2025