உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஐப்பசி பவுர்ணமி கிரிவலம்:200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஐப்பசி பவுர்ணமி கிரிவலம்:200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம்:ஐப்பசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வசதியாக, நவ., 4(நாளை), 5ல், 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம், ஆத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்.குறிப்பாக சேலம் புறநகர், தர்மபுரி, ஓசூர் பஸ் ஸ்டாண்டுகளில், நாளை மாலை, 4:00 மணி முதல், மறுநாள் மதியம், 2:00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம், திருவண்ணாமலைக்கு, முன்பதிவு செய்து பக்தர்கள் பயணிக்கலாம். அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம் வழியாகவும், www.tnstc.inஎன்ற இணையதளம் மற்றும் அதற்குரிய செயலி வழியே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என, கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை