மேலும் செய்திகள்
அனைவருக்கும் பென்ஷன் திட்டம்
03-Aug-2025
சேலம், அகில இந்திய காப்பீடு கழக, 36வது தென் மண்டல மாநாடு, சேலத்தில் நேற்று தொடங்கியது. மாநாட்டு கொடியை, அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலர் ஸ்ரீகாந்த்மிஸ்ரா ஏற்றினார். தலைவர் அசோக் தாவ்லே, மாநாட்டை தொடங்கி வைத்தார்.காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை, 94ல் இருந்து, 100 சதவீதமாக உயர்த்துவதை எதிர்த்தல்; பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தை பலவீனப்படுத்தும், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணைய முன் மொழிவுகளை கண்டித்தல்; பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கக்கூடாது; எல்.ஐ.சி., நிறுவனத்தில் புது பணி நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக ஊர்வலம் நடந்தது. தென்மண்டல தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சேலம் எம்.பி., செல்வகணபதி, ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார். மெய்யனுாரில் புறப்பட்ட ஊர்வலம், 3 ரோடு வழியே சென்று மாநாட்டு திடலை அடைந்தது. இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர்கள் அமானுல்லாகான், வேணுகோபால், ரவீந்திரநாத், ரமேஷ், ரவி, கிரிஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று, நாளையும், மாநாடு நடக்கிறது.
03-Aug-2025