அலையன்ஸ் ஏர் விமானம் ரத்து
ஓமலுார், சேலம் விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் ஏர் நிறுவனம், சேலம் - பெங்களூரு, சேலம் -கொச்சி பகுதிகளுக்கு, பயணியர் விமான சேவையை இயக்கி வருகிறது.நேற்று முன்தினம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், சேலம் - பெங்களூரு - கொச்சின் விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் நாளாக நேற்றும் ரத்து செய்யப்பட்டது.இதுகுறித்து அந்நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'வேறு விமானம் இல்லாததால் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது' என்றனர்.