உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஏற்காட்டில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஏற்காடு: ஏற்காட்டில், புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1995-96ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், 30 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது.இந்நிகழ்ச்சியில், ஒரே வகுப்பில் ஒன்றாக படித்த, 40 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒன்றிணைந்து, 30 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்வை, நினைவுகூறும் வகையில், ஏற்காடு ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில், ஏற்காடு வந்திருந்த சுற்-றுலா பயணிகளுக்கு, 100 மரக்கன்றுகளை வழங்கி, மரம் வளர்ப்போம், இயற்கை வளம் காப்போம் என்று முழங்கி விழிப்-புணர்வு ஏற்படுத்தினர். பின் அனைவரும் ஒன்று கூடி, தங்கள் பள்ளி பருவ வாழ்க்கையை பற்றி பேசி, உணவருந்திய நெகிழ்ச்-சியான நிகழ்வு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை