உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆம்புலன்ஸ் ஓனர் மர்மச்சாவு

ஆம்புலன்ஸ் ஓனர் மர்மச்சாவு

சேலம், டிச. 21-சேலம், சீலநாயக்கன்பட்டி, பெருமாள் கோவில் மேட்டை சேர்ந்த குமார் மகன் கார்த்தி, 27. திருமணமாகாத நிலையில், சொந்தமாக ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தார். அவரது அலுவலகம் திருச்சி பிரதான சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் குமார், கார்த்திக்கை, மொபைல் போனில் தொடர்பு கொண்டார். அவர் எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்து, அலுவலகத்தில் சென்று குமார் பார்த்தபோது, கார்த்தி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மது அருந்தும் பழக்கம் கொண்ட கார்த்தி, துாக்கமின்மை பிரச்னையால் அவதிப்பட்டுள்ளார். இதற்கு துாக்க மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகளவில் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை