சேலத்தில் கார் மோதி முதியவர் பலி பணத்தை பத்திரமாக மீட்டவர்களுக்கு பாராட்டு
சேலம்: சேலத்தில், பைக் மீது கார் மோதி முதியவர் இறந்தார். அதேச-மயம், டாஸ்மாக் பணியாளரிடம் இருந்த பணம் பத்திரமாக மீட்-கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.சேலம் மாவட்டம், வேம்படிதாளத்தை சேர்ந்தவர் மகுடேசன், 54. இவர், கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில் நண்பர் குழந்தைவேலு. 66, என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, மேம்பாலத்தில் செல்லும் போது அவ்வழியாக வந்த கார், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், பன-மரத்துப்பட்டி பகுதியில் இருந்த, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உத-வியாளர் மாசிநாயக்கன் பட்டியை சேர்ந்த நடேசன், டிரைவர் ஆதிசேஷன் ஆகியோர், இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்-துவமனையில் அனுமதித்தனர்.அப்போது, மகுடேசன் கொண்டு வந்த உடமைகளை, மருத்துவ உதவியாளர் சோதனை செய்த-போது, அவரிடம் டாஸ்மாக் கடையில் வசூலான தொகை, ஐந்து லட்சத்து, 62 ஆயிரத்து, 600 ரூபாய் இருந்தது. அந்த தொகையை நடேசன், ஆதிசேஷன் ஆகியோர் உடனடியாக சேலம் அரசு மருத்-துவமனையில் பணியில் இருந்த போலீசார் மற்றும் மருத்துவர் முன்னிலையில் மகுடேசன் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அந்த பணத்தை டாஸ்மாக் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். பணத்தை பத்திரமாக எடுத்து வந்து, ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் மருத்துவர்கள், போலீசார் பாராட்டினர்.இந்நிலையில் விபத்து ஏற்பட்டு, படுகாயமடைந்த குழந்தை-வேலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.