மேலும் செய்திகள்
பெண்ணிடம் செயின் பறிப்பு இரு வாலிபர்களுக்கு வலை
16-Aug-2025
சேலம், ஆடு திருடிய இரு வாலிபர்கள், அடுத்த நாள் சந்தைக்கு வருவர் என எதிர்பார்த்து மூதாட்டி காத்திருந்தார். அதன்படி வந்த இரு வாலிபர்களை, உறவினர்கள் உதவியுடன், மூதாட்டி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தார்.சேலம், நெத்திமேடு, கே.பி.கரட்டை சேர்ந்தவர் இருசாயி, 60. இவர் நேற்று முன்தினம் மாலை, கரடு பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆடு திருடுபோனது தெரிந்தது. இந்நிலையில் நேற்று காலை, இருசாயி, உறவினர்களுடன், மணியனுார் சந்தைக்கு வந்து காத்து கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே, அவரது ஆட்டை விற்க இரு வாலிபர்கள், அங்கு வந்தனர். அப்போது, இருவரையும் கையும் களவுமாக பிடித்து, அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், உத்தரப்பன் நகரை சேர்ந்த ஜோசப் அன்ரேயா, 40, வள்ளுவர் நகர் ஹரிஷரன், 25, என தெரிந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Aug-2025