கூட்டணி குறித்து அன்புமணி விரைவில் அறிவிப்பார்: ஒருங்கிணைப்பாளர் தகவல்
சேலம்,: ''பா.ம.க., தலைவர் அன்புமணி, கூட்டணி குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்,'' என, பொதுக்குழு கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி பேசினார்.சேலம் பா.ம.க., கொண்டலாம்பட்டி மண்டல பொதுக்குழு கூட்டம், தாதகாப்பட்டியில் நேற்று நடந்தது. வக்கீல் குமார் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, பேசியதாவது: தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ம.க., தலைவர் அன்புமணி விரைவில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை, 10 நாட்களுக்குள் வெளியிடுவார். வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு வீடுகள்தோறும் நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கையை விரைவில் முடிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான பணிகள் பா.ம.க., தலைமை அறிவுறுத்தல்படி, தொண்டர்களுக்கு வழங்கப்படும். உறுப்பினர் சேர்க்கை அதிகரித்தால்தான் சட்டசபை தேர்தலில் நம் பங்கை அதிகரித்து காட்ட முடியும்.இவ்வாறு பேசினார்.மாவட்ட செயலர் சரவணன், கொண்டலாம்பட்டி மண்டல செயலர் மணிகண்டன், தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.