திருச்செங்கோடு அருகே அங்கன்வாடி மையம் திறப்பு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், தோக்கவாடி ஊராட்சி, வேலாத்தாள் கோவில் அருகே உள்ள நெசவாளர் காலனி பகு-தியில், 14 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா, நேற்று நடந்தது. ஆதிதிராவிடர் நலத்-துறை அமைச்சர் மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், அட்மா தலைவர் வட்டூர் தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.