உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

நங்கவள்ளி: நங்கவள்ளி வட்டார அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், வீரக்கல்லில் உள்ள, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவி உமா தலைமை வகித்தார். அதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்தல்; ஓய்வு பெறும் போது பணிக்கொடையாக ஊழியருக்கு, 10 லட்சம்; உதவியாளருக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்குதல்; குடும்ப ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்குதல் என்பன உள்பட, 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 50க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை