கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
தலைவாசல், தலைவாசல், தேவியாக்குறிச்சியில், கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கால்நடை உதவி இயக்குனர் நவநீதன் தொடங்கி வைத்தார். அதில், 400க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளித்து சுகாதாரம், பால் கறவை செய்தல், கால்நடை பராமரிப்பு மற்றும் துாய்மையாக வைத்தல் குறித்து, விவசாயிகளுக்கு, கால்நடைத்துறையினர் விளக்கம் அளித்தனர். கால்நடை மருத்துவ கல்லுாரி விரிவாக்கத்துறை தலைவர் சக்திவேல், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.