சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிேஷகம்
சேலம்:சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபி ேஷக வைபவம் நாளை நடக்க உள்ளது. அன்று காலை, சிவனுக்கு சிறப்பு அபிேஷகம், மாலை, 5:30 மணிக்கு அன்னாபிேஷக வைபவம் நடக்க உள்ளது. பின், 8:30 மணிக்கு அன்ன சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை செய்து, கோவில் வளாகத்தில் வலம் வந்த பின் தெப்பக்குளத்தில் கரைக்கப்படும். மூலருக்கு அன்னாபிேஷகம் செய்த சாதம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என, கோவில் குருக்கள் பிரசன்னா தெரிவித்தார். மேலும் அன்னாபிேஷகத்துக்கு அரிசி வழங்க விரும்பும் பக்தர்கள் கோவில் பிரகாரம் முன் பச்சரிசி, புழுங்கல் அரிசியை தனித்தனியே போட பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.