உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதியவர் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு

முதியவர் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு

சேலம்: சேலம், கருப்பூர் அருகே தேக்கம்பட்டி, ஆதிதிராவிட காலனியை சேர்ந்தவர் பெருமாள், 84. நேற்று உடல் நிலை பாதிப்பால் இறந்தார். அவரது உடலை அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அந்த இடம் தொடர்பாக உறவினர் சுப்ரமணி தரப்பினருடன் பிரச்னை உள்ளதோடு, நீதிமன்ற வழக்கு நடக்கிறது. இதனால் அங்கு பெருமாள் உடலை அடக்கம் செய்ய சுப்ரமணி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். கருப்பூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரிடமும், துணை போலீஸ் கமிஷனர் லதா, ஓமலுார் தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேச்சு நடத்தி சமாதானப்-படுத்தினர். பின் பெருமாள் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு கருதி, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி