லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை தேவை பச்சனம்பட்டி உறுப்பினர்கள் போராட்டம்
ஓமலுார்: திட்டப்பணிகளில் முறைகேடு நடந்துள்ளதால், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தி, மூன்று பெண் உறுப்பினர்கள் இரவு வரை தர்ணா போராட்-டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஓமலுார் ஒன்றியத்துக்குட்பட்ட, பச்சனம்பட்டி ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்-ளன. தலைவியாக கம்சலா, துணைத்தலைவியாக சித்ரா உள்ளனர். நேற்று வார்டு உறுப்பினர்கள் கூட்டம் கம்சலா தலைமையில் நடந்தது. அதில், 4வது வார்டு உறுப்பினர் லதா, 5வது வார்டு உறுப்பினர் அமிர்தம், 8வது வார்டு உறுப்பினர் புஷ்பா ஆகியோர், மன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே, பல்வேறு திட்டப்ப-ணிகள் ஊராட்சி தலைவரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில பணிகள் மேற்கொள்ளப்படாமலேயே தொகை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. முறைகேடுகளுக்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.ஊராட்சி தலைவர் கம்சலா பெறுப்பேற்ற நாள் முதல், இன்று வரை மேற்கொள்ளப்பட்ட பணிகளை, லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை கூட்டப் பொருளாக சேர்க்க வேண்டும் என கூறி, மூன்று பேரும் அலுவலக கூட்ட அறை முன் தர்ணா போராட்டத்தை காலை, 10:30 மணிக்கு துவங்கினர்.ஓமலுார் பி.டி.ஓ., நல்லதம்பி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மன்ற அரங்கிற்குள் வருமாறு அழைத்த போது, தீர்மானமாக கொண்டு வந்தால் தான், உள்ளே வருவோம் என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்-தனர். கூட்ட அறையில் இருந்த தலைவி கம்சலாவை மதியம், 2:00 மணிக்கு ஓமலுார் போலீசார் மீட்டு வீட்-டுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு வரை ஊராட்சி அலுவலகத்தில், மூன்று பெண் உறுப்பினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.