மரக்கன்று நட்டவருக்குபாராட்டு விழா
மரக்கன்று நட்டவருக்குபாராட்டு விழாவாழப்பாடி, டிச. 22-வாழப்பாடி, புதுப்பாளையத்தில், 46 ஹெக்டேரில், சடையன் செட்டியேரி உள்ளது. அங்கிருந்த சீமைக்கருவேல மரங்கள், முட்புதர்கள் அகற்றப்பட்டு, லயன்ஸ் கிளப், வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், கெங்கவல்லி வனத்துறை இணைந்து, அத்தி, அரசு, ஆலம் என, 500 மரக்கன்றுகளை, இரு வாரங்களுக்கு முன் நடவு செய்தனர்.இதற்கு உதவிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா, ஏரிக்கரை சாலையோரம் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. வேளாண் அட்மா குழு தலைவர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.இதில் வாழப்பாடி லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சந்திரசேகரன், ஷபீராபானு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர், ஏரியில் மரக்கன்று நட உதவிய தன்னார்வலர்கள் மகேஸ்வரன், குணசேகரன், தனியார் பள்ளி தாளாளர் செல்லதுரை உள்ளிட்ட குழுவினரை பாராட்டினர்.