உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செவிலியரை மிரட்டிய தறித்தொழிலாளி கைது

செவிலியரை மிரட்டிய தறித்தொழிலாளி கைது

இடைப்பாடி: சங்ககிரி அருகே அரசிராமணி குள்ளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அபிநயா. இவர், தேவூர் போலீசில் புகார் அளித்தார். அதில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஜீவானந்தம், 64, அரசிராமணி குள்ளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியரை பின் தொடர்ந்து வந்து தகாத வார்த்தையில் பேசினார். மேலும் தினமும் மொபைல் போனில் பேச வேண்டும். இல்லையெனில் கொன்று விடுவேன் என மிரட்டினார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி இருந்தார். விசாரித்த போலீசார், நேற்று ஜீவானந்தத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை