உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலி ஆர்.சி., புக் தயாரித்து லாரியை விற்றவர் கைது

போலி ஆர்.சி., புக் தயாரித்து லாரியை விற்றவர் கைது

நங்கவள்ளி: ஈரோடு, அந்தியூர், எண்ணமங்கலத்தை சேர்ந்த, லாரி டிரைவர் கணேசன், 31. இவர், 12 சக்கரம் கொண்ட லாரியை, 'பைனான்ஸ்' மூலம் வாங்கி தொழில் செய்தார். குடும்ப சூழலால் தவணை கட்ட முடியவில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே வீரக்கல்லை சேர்ந்த கார்த்திக்குமார், 38, என்பவரிடம் லாரியை கொடுத்து மாத தவணை கட்ட அறிவுறுத்தினார். 4 தவணைக்கு பின் கார்த்திக்குமாரும் பணம் கட்டவில்லை.இதனால் நிதி நிறுவனத்தினர், லாரியை ஜப்தி செய்ய வந்தனர். இதுகுறித்து நேற்று முன்தினம் கணேசன், கார்த்திக்குமாரிடம் கேட்டார். அப்போது அவர், 'லாரி நம்பர், சேசிங் நம்பர் ஆகியவற்றை மாற்றி, போலியாக ஆர்.சி., புக் தயாரித்து லாரியை விற்றுவிட்டேன்' என தெரிவித்துள்ளார். இதனால் கணேசன், நங்கவள்ளி போலீசில் நேற்று புகார் அளித்தார். கார்த்திக்குமார் மீது மோசடி வழக்கு பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி