மேலும் செய்திகள்
வேன் மோதி மாடு வியாபாரி பலி
14-Jun-2025
ஓமலுார்: ஓமலுார், காமலாபுரம் அருகே சட்டூரை சேர்ந்தவர் நந்தினி, 22. எம்.எஸ்சி., படிக்கும் இவர் கடந்த, 12ல், கல்லுாரிக்கு செல்வதாக புறப்பட்ட நிலையில், வீடு திரும்பவில்லை. மகளை காணவில்லை என, அவரது பெற்றோர், ஓமலுார் போலீசில் புகார் அளித்தனர்.இந்நிலையில் நேற்று நந்தினி, அவரது காதலரான, சட்டூரை சேர்ந்த, மெக்கானிக் சிவா, 22, என்பவருடன், நேற்று ஓமலுார் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார். அப்போது, கடந்த, 12ல் பவானியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, ஜலகண்டாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து, அவரது பெற்றோரை வரவழைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Jun-2025