உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளி மீது தாக்குதல்; கள்ளக்காதலன் கைது

தொழிலாளி மீது தாக்குதல்; கள்ளக்காதலன் கைது

இடைப்பாடி: இடைப்பாடி அருகே இருப்பாளி, வேப்பமரத்துாரை சேர்ந்தவர் சதீஷ், 30. கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீர்த்திகா, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கீர்த்திகா, அதே பகுதியை சேர்ந்த குணசேகரன், 21, என்பவருடன் நெருங்கி பழகிய நிலையில், சதீஷ் பலமுறை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சதீஷ், வீட்டின் ஹாலிலும், கீர்த்திகா, அவரது அறையில் குழந்தைகளுடனும் துாங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, குணசேகரன், கீர்த்திகா அறைக்குள் நுழைந்தார். அப்போது எழுந்த சதீஷ், 'எதற்கு வந்தாய்' என, குணசேகரனிடம் கேட்டார். அதற்கு அவர், 'அப்படித்தான் வருவேன்' எனக்கூறி, விறகு கட்டையால் சதீ ைஷ தாக்கினார். அக்கம் பக்கத்தினர் வந்ததால், குணசேகரன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சதீஷ் புகார்படி, பூலாம்பட்டி போலீசார் விசாரித்து, குணசேகரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை