உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிளக்ஸ் கடைக்காரரை தாக்கியவர் கைது: அண்ணன்களுக்கு வலை

பிளக்ஸ் கடைக்காரரை தாக்கியவர் கைது: அண்ணன்களுக்கு வலை

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, மளிகை கடை வீதியை சேர்ந்த ராஜா மகன் கார்த்திக், 28. அதே பகுதியில் பிளக்ஸ் பேனர் கடை வைத்துள்ளார். கடந்த ஆகஸ்டில் அங்குள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, கார்த்திக்கின் தம்பி பிரபுவுக்கும், முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன், 40, என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முன்விரோதம் உருவானது.கடந்த, 13 இரவு, பிளக்ஸ் கடைக்காரர், மாரியம்மன் கோவில் அருகே பேக்கரியில் இருந்தார். அங்கு வந்த மணிகண்டன் வாக்குவாதம் செய்து, பிளக்ஸ் கடைக்காரரை தாக்கினார். அவர் தப்பி ஓடியபோதும், மணிகண்டன் அவரது தம்பிகள் ரமேஷ், 39, கார்த்திக், 38, ஆகியோர் விரட்டி சென்று தாக்கினர். தடுக்க முயன்ற அவரது தந்தை ராஜா மீதும் தாக்கினர். இதுகுறித்து பிளக்ஸ் கடைக்காரர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி ஆட்டையாம்பட்டி போலீசார், கார்த்திக், 38, என்பவரை கைது செய்து மணிகண்டன், ரமேைஷ தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ