மேலும் செய்திகள்
கவுன்சிலர் தர்ணா; விக்டோரியா ஹால் முற்றுகை
01-Aug-2025
சேலம், சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகுமார், 53. இவர், 28வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். இவர் மனைவி மகாலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன், நேற்று மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து, புகார் மனு அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது:சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் பூஜை செய்து விட்டு வீட்டில் இருந்தேன். அப்போது, அப்பாசாமி தெருவில், தி.மு.க., உறுப்பினர் கோபிநாத் என்பவர், மது போதையில், அருகில் உள்ளவர்களை தாக்கி, தகாத வார்த்தையில் பேசியுள்ளார். உடனே நான் இது குறித்து, கோபிநாத் சண்டை போடாமல் இங்கிருந்து போங்கள் என தெரிவித்த போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் என்னை கொலை செய்ய முயற்சித்தார். என் குடும்பத்தினர் தடுத்ததால் அசம்பாவிதம் நடைபெறாமல் போனது.என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், வெள்ளிப்பட்டறை மணி துாண்டுதலின் பேரில், கோபிநாத் என்னை கத்தியால் கொலை செய்ய முயற்சி செய்தார். எனவே எனக்கும், என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டவர், துாண்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
01-Aug-2025