குழந்தைகளுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி
சேலம்: சேலம், பெரிய கிருஷ்ணாபுரம், மத்துாரை சேர்ந்தவர் சங்கர், 29. இவரது மனைவி மீனா, 24. இவர்களது மகன் விநாயகர், 7, மகள் சாதனா, 5. இவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். தொடர்ந்து மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு போலீசார் தடுத்து விசாரித்தனர்.அப்போது சங்கர் கூறுகையில், ''உடன் பிறந்தவர்கள், 4 பேரும், இரு தொகுப்பு வீடுகளில் கூட்டு குடும்பமாக வாழ்ந்தோம். நான் காதல் திருமணம் செய்தது முதல், கருத்து வேறுபாட்டிலிருந்த அண்ணன், எங்களை வீட்டில் இருந்து தற்போது வெளியேற்றி-விட்டார். வாழ வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் முடி-வுக்கு தள்ளப்பட்டோம். அதே வீட்டில் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.டவுன் போலீசார், அனைவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச்-சென்று விசாரிக்கின்றனர்.