உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜவுளிக்கடை சுவர் மீது ஏற முயற்சி வடமாநில வாலிபருக்கு கவனிப்பு

ஜவுளிக்கடை சுவர் மீது ஏற முயற்சி வடமாநில வாலிபருக்கு கவனிப்பு

ஆத்துார்: ஆத்துார், ராணிப்பேட்டை சாலையில் உள்ள நகராட்சி அலுவ-லகம் அருகே, அண்ணா கலையரங்கம், ஜவுளி உள்பட வணிக வளாக கடைகள் அதிகளவில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு அண்ணா கலையரங்க சுவர் மீது ஏறி, அருகே உள்ள ஜவுளிக்கடை சுவர் மீது ஒருவர் ஏற முயன்றார். அதைப்-பார்த்த மக்கள், அவரை பிடிக்க முயன்றபோது, அங்கும் இங்கு-மாக ஓடினார்.ஒருவழியாக, அவரை பிடித்து, உரிய முறையில், 'கவனிப்பு' செய்து, பின்புறமாக கைகளை கட்டிவைத்து, ஆத்துார் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சட்டீஸ்கர், மஹா-ராஷ்டிரா என கூறியதால், அவர் மீது சந்தேகமடைந்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை