உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொப்பரை வரத்து சரிவு விரைவாக முடிந்த ஏலம்

கொப்பரை வரத்து சரிவு விரைவாக முடிந்த ஏலம்

ஓமலுார்: ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 73 மூட்டைகளில் கொப்பரையை கொண்டு வந்தனர். வியாபாரிகள், கிலோ, 72.89 முதல், 145.67 ரூபாய் வரை ஏலம் கோரினர். 28.03 குவிண்டால் மூலம், 3.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த, 28ல் நடந்த ஏலத்தில், 107 மூட்டைகள் கொண்டு வரப்பட்ட நிலையில், நேற்று, 73 மூட்டைகளாக வரத்து சரிந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'வழக்கமாக காலை, 11:00 முதல் மாலை, 6:00 மணி வரை ஏலம் நடக்கும். வரத்து சரிவால், இன்று(நேற்று), காலை, 11:00 மணிக்கு தொடங்கி, மதியம், 3:00 மணிக்கே ஏலம் முடிந்துவிட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !