கிளை நுாலகருக்கு விருது
கிளை நுாலகருக்கு விருதுசேலம், நவ. 27-தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை பொது நுாலக இயக்ககம் சார்பில் சிறந்த நுாலகர்களுக்கு, 'முனைவர் அரங்கநாதன்' விருது வழங்கும் விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் சேலம், ஸ்வர்ணபுரி, முழு நேர கிளை நுாலகத்தை சேர்ந்த, 3ம் நிலை நுாலகர் சம்பத்துக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், விருது வழங்கினார்.எஸ்.பி.ஐ., வங்கி மூலம் நுாலகத்துக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் தளவாடங்கள், விநாயகா மிஷன் அறக்கட்டளை சார்பில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறை, போட்டித்தேர்வுக்கு தயாராக, 50,000 ரூபாய் மதிப்பில் தனி அறை உள்பட, 7 லட்சம் ரூபாய் நன்கொடை பெற்று, மேற்கொண்ட நுாலக சேவை, போட்டித்தேர்வில் மாணவர்கள் வென்றதன் சேவையை பாராட்டி, அரங்கநாதன் விருது, சிறந்த நுாலகர் சான்றிதழ் வழங்கப்பட்டன. அரசு செயலர் மதுமதி, பொது நுாலக இயக்குனர் சங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.