மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு பயிற்சி
06-Aug-2025
சேலம், சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், பள்ளி மாணவர்கள் இடையே, பேரிடர் கால மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மூக்கனேரியில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ரவிக்குமார் தொடங்கிவைத்தார். அதில் நீர்நிலை பகுதிகளில் யாரேனும் மாட்டிக்கொண்டால் எவ்வாறு மீட்பது, ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு முதலுதவி எப்படி அளிப்பது, பேரிடர் காலங்களில் காயம் ஏற்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்பது, சாலைகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு மீட்பு பணி குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. துறை அலுவலர் மகாலிங்க மூர்த்தி, உதவி அலுவலர்கள் சிவக்குமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
06-Aug-2025