தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு தேவை
சேலம், மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் (கோயமுத்துார்), தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை இணைந்து, சேலத்தில் மாநில அளவிலான பழங்குடியின உழவர் சங்க பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் சேலத்தில் நேற்று துவங்கியது.ஐந்தினை திட்டம் குறித்து, மாநில பழங்குடியின இயக்குனர திட்ட மேலாளர் பொன் வைத்தியநாதன் பேசினார். மத்திய வேளாண் பொறியியல் நிறுவன மண்டல தலைவர் ரவிந்திர நாயக் வேளாண் இயந்திரங்களின் பயன்பாடு, பராமரிப்பு குறித்து பேசினார்.தமிழக பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் சாந்தி பேசியதாவது: ஐந்தினை திட்டத்தில், பழங்குடி உழவர் சங்கங்களுக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் பல்வேறு நவீன வேளாண் இயந்திரங்கள் மானியத்துடன் வாங்கவும், பாரமரிக்கவும் உதவி செய்யப்படுகிறது. மாநிலத்தில், 11 சங்கங்கள் துவங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நான்கு சங்கங்களே துவக்கப்பட்டுள்ளது. திட்டம் குறித்து தகவல்கள், விழிப்புணர்வு இல்லாததால் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு தடையாக உள்ளது.இங்கு வந்துள்ள பழங்குடி உழவர் சங்க பொறுப்பாளர்கள் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து, இரண்டு நாள் கலந்துரையாடலில் முழுவதுமாக தெரிந்து கொண்டு, பழங்குடியினரை பங்கு பெற செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.ஏற்பாடுகளை, திட்ட ஆலோசகர் மூத்த விஞ்ஞானி செந்தில் குமார் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.