உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் விழிப்புணர்வு மாரத்தான்

சேலத்தில் விழிப்புணர்வு மாரத்தான்

சேலம்: சேலத்தில் தனியார் அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் மாசு இல்-லாத சேலத்தை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி, சேலம் 5 ரோடு அருகேயுள்ள ரெட்டியூரில், நேற்று விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 2, 5 மற்றும் 7 கி.மீ., என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, 300க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்-துடன் கலந்து கொண்டனர்.ரெட்டியூர் சிவாய நகர், ஏரிக்கரை சாலை, பெருமாள் மலை சாலை, 5 ரோடு, சாரதா கல்லுாரி சாலை வழியாக போட்டி நடத்-தப்பட்டது. மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ