மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்தநாள்: கட்சியினர் மரியாதை
16-Sep-2024
சேலம் : காந்தி, லால் பகதுார் சாஸ்திரி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாளையொட்டி, சேலம் மாநகர் மாவட்ட காங்., சார்பில் விழிப்புணர்வு பாதயாத்திரை நேற்று நடந்தது. குகை, திருச்சி சாலையில் உள்ள ஈ.வெ.ரா., வளைவில் தொடங்கிய யாத்திரைக்கு, மாநில முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமை வகித்தார். அதில் காந்திய சிந்தனை, அமைதி, நல்லிணக்கம், அகிம்சை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி சென்று, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காந்தி சிலை முன் யாத்திரை முடிந்தது. துணை மேயர் சாரதாதேவி, மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில், ''ஜாதிவாரி கணக்கெடுப்பு, பூரண மதுவிலக்கு நிறைவேற்றுவது காங்., லட்சியம். இக்கொள்கையை நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்துவோம். திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டை வரவேற்கிறேன். துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்து,'' என்றார்.த.மா.கா., மரியாதைகாந்தியின், 156வது பிறந்தநாளையொட்டி, ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு, த.மா.கா., சார்பில், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதேநேரம் காமராஜரின் சிலைக்கும் கட்சியினர் மாலை அணிவித்தனர். காங்., கமிட்டி சார்பில் ஓமலுார் நகர தலைவர் சத்தியநாதன் தலைமையில் கட்சியினர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, 'வந்தே மாதரம்' என கோஷம் எழுப்பினர். பல்வேறு அமைப்புகள் சார்பிலும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.தாரமங்கலம் நகர காங்., சார்பில் அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே காந்தி சிலைக்கு நகர தலைவர் சண்முகம் தலைமையில் கட்சியினர், மாலை அணிவித்து மலர் துாவினர். தொடர்ந்து ஊர்வலமாக தபால் நிலையம் அருகே சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட இலக்கிய அணி தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட மனித உரிமைகள் துணைத்தலைவர் லோகநாதன், நகர துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலர்கள் தட்ணாமூர்த்தி, பரமசிவம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.சேலம் மேற்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாடு காங்., கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் தலைமையில் கட்சியினர், சங்ககிரி, அக்கமாபேட்டையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து 2 கி.மீ., விழிப்புணர்வு நடைபயணமாக சென்று, போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பவானி சாலையில் முடிந்தது. வட்டார தலைவர் சரவணன், நகர தலைவர் ரவி, மாவட்ட பொதுச்செயலர் நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
16-Sep-2024