உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

சேலத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

சேலத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம்சேலம், அக். 12-சேலத்தில், நேற்று ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டியது.நவராத்திரி விழா கடந்த, 3ல் தொடங்கியது. பலரின் வீடுகளில் கொலு அமைத்து, தினசரி பூஜை, வழிபாடு நடத்தி வந்தனர். ஒன்பதாம் நாளான நேற்று, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகளில் வியாபாரம் களை கட்டியது.ஆயுத பூஜை சிறப்பு விற்பனைக்காக ஏராளமான சாலையோர கடைகள் முளைத்திருந்தன. இங்கு ஏராளமானோர், பழங்கள், பொரி, வாழை மரம், மாவிலை, பூக்கள், மாலை, பூசணிக்காய் என பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.வீடுகளில் உள்ள வாகனங்கள் மற்றும் பூஜையறை சுத்தம் செய்யப்பட்டு, மாலை அணிவித்து பூஜைகள் நடத்தப்பட்டன. கடை, வணிக வளாகங்களிலும், வாழையிலையில், பொரி, சுண்டல், பொங்கல், பழங்கள் உள்ளிட்டவை படையிலிட்டு வழிபாடு நடத்தினர்.கோவில்களிலும் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஆட்டோ ஸ்டாண்டு பகுதிகளில், அனைத்து டிரைவர்களும் சேர்ந்து, அப்பகுதியை தோரணங்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை