மேலும் செய்திகள்
அய்யனாரப்பன் கோவில் கும்பாபிேஷகம்
01-Aug-2025
மேட்டூர், கொளத்துார், கருங்கல்லுார் எல்லம்மாள், அய்யனாரப்பன், வீரகாரன், பரிவார தெய்வங்கள் கும்பாபிேஷக விழாவை ஒட்டி, நேற்று முன்தினம், ரதத்தில் சுவாமி ஊர்வலம், விநாயகர் பூஜை, பஞ்சகாவ்ய பூஜை, யாகசாலை புறப்பாடு, முதல் கால யாக வேள்வி பூஜை, காயத்ரி மந்திர ேஹாமம், தீபாராதனை, புது சிலைகளுக்கு அஷ்டபந்தனம், நவரத்தினம் பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜை, மகா தீபாராதனை, எல்லம்மாள், அய்யனாரப்பன், வீரகாரன் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மேலும் இரு நாட்களாக அன்னதானம் வழங்கப்பட்டது.
01-Aug-2025