பிறந்து 18 நாளில் பெண் சிசு பலி
ஆத்துார், ஆத்துார், முல்லைவாடி, வடக்குகாடு, சக்தி நகரை சேர்ந்தவர் ஜெயவேல், 24. கூலித்தொழிலாளி. இவரது மனைவி, 18 நாளுக்கு முன், பெண் குழந்தை பெற்றெடுத்தார். நேற்று, அந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்ததாக தெரிவித்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.