உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அங்கன்வாடிக்கு சென்ற பெண் குழந்தை மாயம்

அங்கன்வாடிக்கு சென்ற பெண் குழந்தை மாயம்

சங்ககிரி, சங்ககிரி, தேவூர் அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா, 27. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 3 மகன்கள், கவிஷா, 4, என்ற பெண் குழந்தை உள்ளனர். தம்பதியர் கூலித்தொழிலாளிகள் என்பதால், குழந்தைகள் ராஜாவின் தாய் சாந்தி பாதுகாப்பில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். சாந்தி நேற்று முன்தினம் கவிஷாவை, வினோபாஜி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பினார். மாலை, அவராகவே வீட்டுக்கு திரும்புவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் வராததால், சாந்தி அங்கன்வாடிக்கு சென்று விசாரித்தபோது, சிறுமி வரவில்லை என தெரிவித்தனர். தொடர்ந்து சிறுமியின் தந்தை ராஜா நேற்று அளித்த புகார்படி, தேவூர் போலீசார் தேடுகின்றனர்.பள்ளி ஆசிரியைகெங்கவல்லி, கூடமலையை சேர்ந்த முருகேசன் மகள் சற்குணா, 26. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இரு நாட்களுக்கு முன், பள்ளி சென்ற அவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் நேற்று அளித்த புகார்படி, கெங்கவல்லி போலீசார் தேடுகின்றனர். அதேபோல் ஒதியத்துாரை சேர்ந்தவர் இலக்கியா, 21. பி.ஏ., முடித்துவிட்டு, வீட்டில் இருந்தார். இவர் மாயமான நிலையில், அவரது பெற்றோர் புகார்படி, கெங்கவல்லி போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை