சம்பா பருவத்தில் அதிக மகசூல் நெற்பயிருக்கு சமச்சீர் உரமிட அறிவுரை
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில், 40,000 ஏக்கரில் நெல் நடவு பணி நடந்து வருகிறது. ஆனால் அதிகமான, தரமான மகசூல் கிடைக்க, சமச்சீர் உரமிடல் அவசியம் என அறிவுறுத்தப்-பட்டுள்ளது.இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது:இயற்கை உரங்கள், செயற்கை உரங்கள், உயிர் உரங்கள், நுண்-ணுாட்ட சத்துகள் ஆகியவற்றை சேர்த்து நெற்பயிருக்கு அளிப்-பது சமச்சீர் உரம்.இயற்கை உரங்கள்: வயலில் சணப்பை, தக்கைப்பூண்டு பயி-ரிட்டு, 40, -45 நாட்களில் மடக்கி, மண்ணில் உழுவதால் கரிம சத்-துகளின் அளவு அதிகரித்து பயிருக்கு வேண்டிய தழைச்சத்து கிடைக்கிறது.கதிரில் நெல் மணிகள் அதிகரிக்க, மணிகள் நன்றாக முற்ற, தழைச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. பயிர் நட்ட, 3-5 நாட்க-ளுக்குள் ஏக்கருக்கு, 100 கிலோ அசோலா இட்டு, மண்ணில் மிதித்து மட்கச்செய்ய வேண்டும்.இதனால் காற்றிலுள்ள தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்-பட்டு நெற்பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது. நெற்பயிருக்கு அடியுரமாக, மட்கிய தொழு உரம் ஏக்கருக்கு, 5 டன், மட்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு உரம், 2 டன் இடுவதால் மண்ணின் அங்ககத்தன்மை நிலை நிறுத்தப்-பட்டு அதிக விளைச்சலை பெறலாம். குறுவை நெல் ரகங்களுக்கு ஏக்கருக்கு, 48 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்து பரிந்துரைக்கப்படுகிறது.நுண்ணுாட்ட உரம்: இரும்புச்சத்து, துத்தநாக சத்து குறைபாடு உள்ள நிலங்களில் இரும்பு சல்பேட் உரத்தை ஏக்கருக்கு, 20 கிலோவும், ஜிங்க் சல்பேட் ஏக்கருக்கு, 10 கிலோ விதைப்பின்-போது இடவேண்டும். அல்லது வேளாண் துறையின் நுண்-ணுாட்ட உரக்கலவையை ஏக்கருக்கு, 5 கிலோ, 20 கிலோ மண-லுடன் கலந்து பயிர் நடுவதற்கு முன் இட வேண்டும்.உயிர் உரங்கள்: ஒரு ஏக்கருக்கு, 4 பாக்கெட்(200 கிராம்) அசோஸ்-பைரில்லம், 4 பாக்கெட் பாஸ்போ பேக்டீரியா ஆகியவற்றுடன், 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து வயலில் இட வேண்டும். நெற்பயிருக்கு மேலுரமிடுவதில் மிகுந்த கவனம் தேவை. நெல் வளர்ச்சி பருவங்களான துார்-கட்டும் பருவம், தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் தரு-ணத்தில் பயிருக்கு சத்துகளின் தேவை அதிகரிக்கும்.இலைவழி உரமிடல்: இலைவழி உரமாக யுரியா, 1 சதவீதம், டி.ஏ.பி., 2 சதவீதம், பொட்டாசியம் குளோரைடு, 1 சதவீத கரைசலை, குருத்து உருவான தருணத்தில் ஒரு முறையும், 10 நாட்கள் கழித்து ஒரு முறையும் தெளித்தல் வேண்டும். உயிர் உரங்கள், ஜிங்க் சல்பேட் உள்ளிட்டவை அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் மானியத்தில் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.