வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
சேலம்: வங்கதேச இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சேலம், மர-வனேரியில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் முன், வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்-தது. அதில், மாநில பொறுப்பாளர் மகேஷ் தலைமை வகித்து பேசியதாவது: வங்கதேச இந்துக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப-டுவது கவலை அளிக்கிறது. உடனே இந்திய அரசு தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து இந்து இயக்கங்களும் கூட்டாக, இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது அதிர்ச்சி அளிக்கிறது. இந்துக்கள் பாதிக்கப்படும்போது ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரி-விக்க கூட, தமிழகத்தில் இந்துக்களுக்கு உரிமை இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட தலைவர் செந்தில்குமார், சேலம் கோட்ட செயலர் காளிதாஸ், பா.ஜ.,வின் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர். ஆனால் அனுமதியின்றி ஆர்ப்-பாட்டம் நடத்தியதால், 156 பேரை கைது செய்து திருமண மண்ட-பத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.