லாரி சக்கரத்தில் சிக்கி வங்கி ஊழியர் பலி
ஓமலுார்: காடையாம்பட்டி, பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் பரசுராமன், 35. சேலம், அஸ்தம்பட்டி கிளையில் உள்ள தனியார் வங்கியில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்தார். இவருக்கு மனைவி பர-மேஸ்வரி, 30, இரு மகன்கள் உள்ளனர்.நேற்று பரசுராமன் பணி முடிந்து, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வீட்-டுக்கு புறப்பட்டார். மாலை, 6:00 மணிக்கு, ஓமலுார் ஆர்.சி.செட்டிப்பட்டி அருகே, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்-சாலையில் சென்றபோது, மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட கார், பைக் மீது மோதியது. இதில் தடுமாறி, பரசுராமன் விழுந்தார். அப்போது வந்த லாரி சக்கரத்தில், அவர் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் பரசுராமன் உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.